ADDED : அக் 10, 2021 11:45 AM
* வைஷ்ணம் என்பதற்கு 'விஷ்ணு சம்பந்தமானது' என்பது பொருள்.
* விஷ்ணு என்பதன் பொருள் 'எங்கும் நிறைந்திருப்பவர்'
* 'விஷ்ணு சூக்தம்' என்னும் மந்திரம் சாம வேதத்தில் இடம் பெற்றுள்ளது.
* மகாவிஷ்ணுவின் அவதாரங்களை விவரிக்கும் நுால் பாகவத புராணம்
* திருப்பதி ஏழுமலையில் மீனாக பிறக்க ஆசைப்பட்டவர் குலசேகராழ்வார்
* பூலோகத்தில் தரிசிக்க முடியாத இரு திவ்ய தேசங்கள் பரமபதம், பாற்கடல்
* பக்தவத்சலப் பெருமாள் என்பதற்கு 'தாயன்புடன் நம்மை காப்பவர்' என்பது பொருள்.
* திருப்பதி வெங்கடாஜபதி பூலோகத்தில் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம்
* திவ்யதேசங்களில் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும் தலங்கள் 67
* ஆலிலையில் கிருஷ்ணர் துாங்குவதை பத்ர சயனம் என்று குறிப்பிடுவர்
* நைமிசாரண்யம் என்னும் திவ்யதேசத்தில் மகாவிஷ்ணு வனமாக(காடாக) இருப்பதாக ஐதீகம்.
* மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சங்கின் பெயர் பாஞ்சஜன்யம்.
* கண்ணன் என் காதலன் என கவிதை பாடியவர் தேசியக்கவி பாரதியார்.
