தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 11, 2021 02:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2021 02:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பாலை நிலத்திற்கு உரிய தெய்வம் கொற்றவை அல்லது காளி.

* துர்கையம்மனுக்கு 'ஸ்கந்த மாதா' என்றும் பெயருண்டு. இதன் பொருள் முருகனின் தாய்.

* திருவேற்காடு கருமாரியின் உக்கிரத்தை தணித்தவர் ஆதிசங்கரர்.

* காளி, மாரியம்மனை அக்கா, தங்கையாக கருதி வழிபடுவர்.

* அம்பிகையின் திருநாமமான சாகம்பரி என்பதற்கு 'தாவரங்களைக் காப்பவள்' என்பது பொருள்.

* கங்கையில் பார்வதி நீராடிய போது அவளது காதணி விழுந்த இடம் மணிகர்ணிகா கட்டம்.

* மகாகவி காளிதாசர் முதன் முதலில் இயற்றிய பாடல் சியாமளா தண்டகம்.

* கேரளத்தில் பகவதியாக வணங்கப்படும் பெண் தெய்வம் கண்ணகி.

* மீனாட்சியம்மனுக்கு பெற்றோர் இட்ட பெயர் தடாதகை பிராட்டியார்.

* வடக்கு நோக்கி இருப்பதால் வடக்கு வாசல் செல்வி என காளியை அழைப்பர்.

* மகமாயி என்பதற்கு மகிமை நிறைந்தவள் என்பது பொருள்.

* நவராத்திரியின் போது நடத்தப்படும் ஹோமம் மகா சண்டி ஹோமம்.

* அர்ச்சகர் புடவை கட்டியபடி சிவனை பூஜிக்கும் தலம் திருச்சி திருவானைக்காவல்

* வள்ளலாருக்கு அண்ணியாக வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.

* மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்.

* புரட்டாசியில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us