ADDED : அக் 11, 2021 03:00 PM

அக்.8, புரட்டாசி 22: ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் புன்னை மர வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி, திருப்பதி ஏழுமலையான் ஹம்ச வாகனம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கேடசப்பெருமாள் சிம்ம வாகனம்
அக்.9, புரட்டாசி 23: சதுர்த்தி விரதம், திருப்பதி ஏழுமலையான் முத்துபந்தல் அருளிய காட்சி, ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெள்ளிப் பல்லக்கு, ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை பெருமாள் கருட வாகனம், திருமலைநம்பி திருநட்சத்திரம், சிருங்கேரி சாரதாம்பாள் கவுமாரி அலங்காரத்தில் மயில் வாகனம்
அக்.10, புரட்டாசி 24: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம், கருட வாகனம், திருப்பதி ஏழுமலையான் பூபாள வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் சேஷ வாகனம், சிருங்கேரி சாரதாம்பாள் கருட வாகனம்
அக்.11, புரட்டாசி 25: சஷ்டி விரதம், உபாங்க லலிதா கவுரி விரதம், திருப்பதி ஏழுமலையான் மகரகண்டி ஆபரணங்களுடன் கருட வாகனம், குலசேகரன்பட்டினம் முத்தாலம்மன் கொலு தர்பார் காட்சி
அக்.12, புரட்டாசி 26: சரஸ்வதி ஆவாஹனம், திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ராஜாங்க அலங்காரம், தேனி குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு, அகோபில மடம் 20வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம், சிருங்கேரி சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம், குலசேகரன்பட்டினம் முத்தாலம்மன் சிறப்பு அலங்காரம்
அக்.13, புரட்டாசி 27: துர்காஷ்டமி, கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரம், ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சூர்ணாபிேஷகம், ஏனாதி நாயனார் குருபூஜை
அக்.14, புரட்டாசி 28: திருவோண விரதம், மகாநவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, திருப்பதி ஏழுமலையான் தேர், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் வையாழி சேவை, ஒப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை.
