தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 21, 2021 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2021 05:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சிவனுக்குரிய கிழமை விரதம் சோமவாரம் என்னும் திங்கட்கிழமை விரதம்.

* சீர்காழியில் அவதரித்த சிவனடியார் திருஞான சம்பந்தர்.

* கருவறையில் உள்ள சுவாமி சிலையையும் பீடத்தையும் இணைக்கும் மருந்தை அஷ்ட பந்தனம் என்பர். இந்த கலவையில் கொம்பரக்கு, சுக்கான் துாள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் இடம் பெற்றிருக்கும்.

* கருடனின் அம்சமாக பிறந்த ஆழ்வார் பெரியாழ்வார்.

* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் அருள்புரிபவர் பொலிந்து நின்ற பிரான்.

* புளியமரத்தடியில் வீற்றிருக்கும் ஆழ்வார் நம்மாழ்வார். இந்த மரத்தை புளியாழ்வார் என்றே குறிப்பிடுவர்.

* தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணர்.

* திருக்கடல்மல்லை எனப்படும் திவ்யதேசம் மகாபலிபுரம்.

* கந்தசஷ்டி கவசத்தை பாடியவர் தேவராய சுவாமிகள்.

* காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களால் ஆனது

* கிருஷ்ணரின் சகோதரியின் பெயர் சுபத்ரை

* சைவ சமயத்தின் முதல் குருவாக போற்றப்படுபவர் நந்தி தேவர்.

* அசோக வனத்தில் சீதைக்கு உதவிய அரக்கி திரிசடை. இவள் ராவணனின் தம்பியான விபீஷணனின் மகள்.

* மூகாசுரனை வதம் செய்தவள் மூகாம்பிகை. கர்நாடக மாநிலம் கொல்லுாரில் கோயில் கொண்டிருக்கிறாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us