தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 21, 2021 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2021 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்.15, புரட்டாசி 29: விஜய தசமி, தசரத லலித கவுரி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள், ஒப்பிலியப்பன் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்களில் உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் பல்லக்கு, திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம், நிகமாந்த தேசிகன் திருநட்சத்திரம், கரிநாள்.

அக்.16, புரட்டாசி 30: ஏகாதசி விரதம், துளசி கவுரி விரதம், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சப்தாவர்ணம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் கஜலட்சுமி வாகனம், ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் வெற்றி வேர் சப்பரம், ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீநிவாசப் பெருமாள் புஷ்ப யாகம் சாற்றும் முறை, ஸ்ரீவில்லிபுத்துார் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கருட வாகனம், நரசிங்கமுனையர் திருநட்சத்திரம்.

அக்.17, புரட்டாசி 31: கோதுவாதசி, விஷு புண்ணிய காலம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தெப்பம்

அக்.18, ஐப்பசி 1: பிரதோஷம், தானபல விரதம், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் கருட வாகனம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் பவனி, மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நந்தீஸ்வரர் சிறப்பு அபிேஷகம்.

அக்.19, ஐப்பசி 2: தேவகோட்டை ரங்கநாதர் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் பிருந்தாவனக்காட்சி.

அக்.20, ஐப்பசி 3: பவுர்ணமி விரதம், சந்தான கோபால விரதம், கோமதி பூஜை, கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஊஞ்சல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், அவிநாசி சிவன் பவுர்ணமி அபிேஷகம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் புஷ்ப அலங்காரம்.

அக்.21, ஐப்பசி 4: சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, கரூர் கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கு, திருமூலர் குருபூஜை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us