தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 29, 2021 10:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 10:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கல்யாணி, காஞ்சிபுரம்

*பெற்றோர் வைத்த பெயரை மாற்றலாமா?

வேண்டாம். பெற்றோரின் ஆசியுடன் நமக்கு அமைந்த பெயரை மாற்றக் கூடாது.

டி.கலா, கடலுார்

*வியாபாரிகள் சிலர் கல்லாவில் விளக்கேற்றுகிறார்களே...

நல்லது தான். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். விளக்கு ஏற்றும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

எல்.சுகந்தி, திருப்பூர்

*கோபுரத்தின் நிழல் வீட்டின் மீது படக்கூடாதா...

கோபுரத்தின் வாயிலாக தெய்வீக சக்தி நான்கு திசைகளில் பரவினால் ஊர் சுபிட்சமாக இருக்கும். இதற்காக சன்னதி தெரு, மடவிளாகம் என அகலமான தெருக்களாக பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர். இதற்கு மாறாக கோபுரத்தின் நிழல் படும் விதத்தில் நெருக்கமாக வீடு கட்டினால் எதிர்மறை பலன் ஏற்படும்.

எஸ்.பூங்கோதை, சிவகங்கை

*எண்ணெய் இல்லாமல் விளக்கிலுள்ள திரி எரியக் கூடாதாமே...

உண்மை தான். விளக்கு ஏற்றும் பெண்கள் நிறைய எண்ணெய்யை விளக்கில் விடுவதோடு, அவ்வப்போது திரியை துாண்டுவதும் அவசியம்.

பி,ராகவன், திருநெல்வேலி

*அன்பளிப்பாக கிடைத்த சுவாமி படத்தை பிறருக்கு கொடுக்கலாமா?

நீங்கள் நலம் பெற வேண்டும் என்பதே அன்பளிப்பு வழங்கியவரின் நோக்கம். அதே படம் ஒன்றுக்கு மேல் உங்களிடம் இருந்தால் பிறருக்கு கொடுங்கள்.

ஆர்.மதுபாலா, நாகர்கோவில்

*விஷபயம் தீர யாரை வழிபடலாம்?

செவ்வாயன்று முருகனையும், சனிக்கிழமையன்று பெருமாள் கோயிலில் கருடன் சன்னதியில் தீபமேற்ற விஷபயம் தீரும்.

வி.ஆர்த்தி, பெங்களூரு

*ஈசான்ய மூலையின் சிறப்பு என்ன?

ஈசான்யம் என்னும் வடகிழக்கு மூலையின் அதிபதி சிவன். ஊரின் ஈசான்ய பகுதியில் குடியிருந்தால் சிவ கடாட்சத்துடன் சிறப்பாக வாழலாம். ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜையறை, கிணறு, போர்வெல், முதியவர்கள் தங்கும் அறை இருப்பது நன்மை தரும்.

சி.ஹேமா, திருவள்ளூர்

*முகம் பார்க்கும் கண்ணாடியில் கீறல் விழக் கூடாதாமே...

மங்களப் பொருள்களில் ஒன்று கண்ணாடி. காலையில் கண் விழித்ததும் கண்ணாடியைப் பார்ப்பது சுபசகுனம். கீறல், விரிசல் இருந்தால் புதிய கண்ணாடி வாங்குவது அவசியம்.

எஸ்.ஆண்டாள், மதுரை

*பெண் குழந்தைகளுக்கு ருது ஜாதகம் எழுதுவது கட்டாயமா?

இல்லை. பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகம் இருந்தால் போதும். பிறந்த நேரம் தெரியாததால் அந்த காலத்தில் ருது ஜாதகம் எழுதும் வழக்கம் இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us