sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/ஆனந்தமாக இருப்பவர்

ஆனந்தமாக இருப்பவர்

ஆனந்தமாக இருப்பவர்


ADDED : அக் 29, 2021 10:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 10:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நந்தி என்பதற்கு 'எப்போதும் ஆனந்தமாக இருப்பவர்' என்பது பொருள். சிவனின் காவலராக இருக்கும் இவர், கண் இமைக்காமல் சிவனையே தரிசிப்பதால் ஆனந்தமுடன் இருக்கிறார்.

* தமிழகத்தின் பெரிய நந்தி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ளது என நினைப்பீர்கள். ஆனால் மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ., துாரத்திலுள்ள திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயில் நந்தி தான் மிகப் பெரியது.

* பிரதோஷ வேளையான மாலை 4:30 - 6:00 மணி துஷ்ட சக்திகள் நடமாடும். இந்நேரத்தில் சிவன் மீது கொண்ட அன்பின் காரணமாக தன் இரு கொம்புக்கும் நடுவில் சிவனை நிற்க வைத்து பாதுகாக்கிறார். அந்த மகிழ்வில் சிவன் நடனமாடுகிறார்.

* பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியை இடைவிடாமல் செய்பவர் நந்தீஸ்வரர். இவர் தன் நாக்கை வளைத்து மூக்கில் வைத்து மூச்சை அடக்குவதால் மனம் ஒருமுகப்பட்டு சிவ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்.

* வயலை உழுவது, வண்டி இழுப்பது என கஷ்டமான பணியில் ஈடுபடுவது காளை. விவசாயி அடித்தாலும் பொறுமையுடன் தாங்கும். துன்பத்தை பொறுத்துக் கொண்டு அக்கறையுடன் பணிசெய்வதே நந்தி தரும் பாடம்.

* பக்தர்களில் சிலர் நந்தியின் காதில் தங்களின் குறைகளைச் சொல்லி வழிபடுவர். மனம், உடல் துாய்மை மிக்கவர்கள், மந்திர தீட்சை பெற்றவர்கள் மட்டும் கோயில் சிலையைத் தொடும் உரிமை உண்டு. நந்தியை தொடாமல் மனதார வழிபட்டாலே குறை நீங்கும்.

* மூளையிலுள்ள 'பினியல் கிளாண்ட்' என்னும் சுரப்பியை 'நந்தி' எனக் குறிப்பிடுவர். சிந்தனையைத் துாண்டும் சக்தி இதற்குண்டு. மந்தமானவர்களுக்கு இச்சுரப்பியில் போதுமான திரவம் இருக்காது. திங்கட்கிழமைகளில் நந்திக்கு அருகம்புல் சாத்தி வழிபட்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us