ADDED : அக் 29, 2021 02:17 PM

* பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாக பிறந்தவர் பொய்கையாழ்வார்.
* பூமிதேவியின் அம்சமாக பிறந்த பெண் ஆழ்வார் ஆண்டாள்.
* மகாவிஷ்ணுவின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்
* நம்மாழ்வரை குருநாதராக ஏற்றவர் மதுரகவியாழ்வார். இவரால் பாடப்பட்ட பாடல் கண்ணிநுண் சிறுதாம்பு.
* திருப்பதியில் ஏழுமலையான் முன் படியாக இருப்பவர் குலசேகராழ்வார்.
* ஸ்ரீரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் திருப்பாணாழ்வார்.
* சிவத்தலங்களில் 'கோயில்' என்றால் அது சிதம்பரத்தை குறிக்கும்.
* கைலாயத்தில் சிவதரிசனத்திற்கு அனுமதிப்பவர் நந்திதேவர்.
* சிவ சின்னங்களில் முதலிடம் வகிப்பது திருநீறு.
* ருத்ராட்சம் என்பதன் பொருள் சிவனின் கண்.
* காளை மாடு சிவனை பூஜித்த தலம் திருவையாறு.
* தேவர்கள் சிவராத்திரியன்று வழிபடும் திருக்கோலம் லிங்கோத்பவர்.
* மதுரையில் சித்தராக எழுந்தருளியவர் சுந்தரானந்தர். 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் இவரை அழைப்பர்.
* பஞ்சபூத தலங்களில் நீருக்குரியது திருவானைக்காவல்.
* உயிர்களைக் காப்பதற்காக சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம்.
* ஆதிசங்கரர் நிறுவிய முக்திலிங்கம் கேதார்நாத்தில் உள்ளது.
