தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 29, 2021 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2021 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காலபைரவர், துர்கையை பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரகதோஷம் நீங்கும்.

* வெள்ளிக்கிழமையில் பார்வதி, லட்சுமி, துர்கை என பெண் தெய்வங்களை வழிபட்டால் களத்திர தோஷம் தீரும்.

* தினமும் 108 முறை 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.

* விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் முயற்சி தடையின்றி நிறைவேறும்.

* அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தல், பூப்பறித்தல் போன்றவற்றை சூரியன் உதயமான (அதிகாலை 5:45 மணிக்கு பிறகு) செய்ய வேண்டும்.

* கோயிலில் தரும் விபூதி, குங்குமத்தை வீட்டிற்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்து, மீதியை பூஜை அறையில் வைத்தால் நன்மை பெருகும்.

* செவ்வாய்தோறும் முருகனுக்கு செவ்வரளி போன்ற சிவப்புநிற மலர்களால் அர்ச்சனை செய்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.

* வெள்ளிக்கிழமையில் வில்வம் பழத்தை பூஜை அறையில் வைத்து வழிபட கடன், வறுமை தீரும்.

* மகாவிஷ்ணுவின் கையிலுள்ள சக்ராயுதம் 'சுதர்சனம்' எனப்படும். நோய், எதிரி பயம், மனக்குழப்பம், திருஷ்டி போன்றவற்றில் இருந்து காக்க வல்லது சுதர்சனம்.

* திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை படியுங்கள். நவகிரகங்களால் ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us