ADDED : நவ 12, 2021 01:03 PM

அ நிறம் | அளவு
* அவ்வையாருக்கு நாவல் பழத்தை முருகன் அளித்த படைவீடு சோலைமலை.
* குருமலை மருவிய பெருமாளே என அழைக்கப்படுபவர் சுவாமிமலை முருகன்.
* அன்பரின் நெஞ்சமாகிய குகையில் இருப்பதால் முருகனுக்கு 'குகன்' என்று பெயர்.
* முருகன் மீது நக்கீரர் பாடிய சங்கத்தமிழ் நுால் திருமுருகாற்றுப்படை.
* ராமபிரானுக்கு முருகனின் வரலாற்றை எடுத்துரைத்த முனிவர் விஸ்வாமித்திரர்.
* வடநாட்டில் முருகப்பெருமானை 'கிருத்திக்' எனக் குறிப்பிடுவர்.
* கந்தகோட்டத்து முருகனிடம் உத்தமர்களின் உறவு வேண்டும் என யாசித்தவர் வள்ளலார்.
* திருச்செந்துார் முருகன் சிலையை கடலில் இருந்து எடுத்தவர் வடமலையப்ப பிள்ளை.
* திருப்புகழ் பாடல்களை மக்களிடம் பரப்பிய முருகனடியார் வள்ளிமலை சுவாமிகள்.
* முருகனின் திருநாமத்தை இடைவிடாமல் ஜபித்த பெண் பக்தை முருகம்மையார்
