தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : நவ 12, 2021 01:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2021 01:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.5, ஐப்பசி 19: கோவர்த்தன விரதம், சிக்கல் சிங்காரவேலர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டுக்கிடா வாகனம், குமாரவயலுார் முருகன் சேஷ வாகனம், வள்ளியூர் முருகன் ஏகசிம்மாசனத்தில் வெள்ளி மயில் வாகனம், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி, திருப்பரங்குன்றம் முருகன் புறப்பாடு, திருநெல்வேலி நெல்லையப்பர் மஞ்சள் நீராட்டு விழா.

நவ.6, ஐப்பசி 20: சந்திர தரிசனம், எமத்துவிதியை, சிக்கல் சிங்காரவேலர் தங்க மயில் வாகனம், குமார வயலுார் முருகன் ரிஷப வாகனம், வள்ளியூர் முருகன் பூங்கோயில் சப்பரம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு, பூசலார் நாயனார் குருபூஜை, திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி ஊஞ்சல் சேவை, கரிநாள்.

நவ.7, ஐப்பசி 21: திரிலோசன கவுரி விரதம், சிக்கல் சிங்கார வேலர் வேணுகோபால் திருக்கோலம், குமாரவயலுார் முருகன் கஜமுகாசுரனுக்கு பெருவாழ்வு அளித்தல், வள்ளியூர் முருகப்பெருமான் ஏகசிம்மாசனத்தில் பவனி, மாயவரம் கவுரிமாயூர நாதர் உற்ஸவம் ஆரம்பம், உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் உற்ஸவம் ஆரம்பம்.

நவ.8, ஐப்பசி 22: முகூர்த்தநாள், சதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி, துார்வா கணபதி விரதம், சிக்கல் சிங்காரவேலர் உமாதேவியிடம் சக்திவேல் வாங்குதல், குமாரவயலுார் முருகன் சிங்கமுகாசுரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், வள்ளியூர் முருகன் உருகு பலகைத் தரிசனம், மணவாள மாமுனிகள் திருநட்சத்திரம், ஐயடிகள் காடவர் கோன் நாயனார் குருபூஜை,

நவ.9, ஐப்பசி 23: கந்தசஷ்டி, முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம், சிக்கல் சிங்காரவேலர் இந்திர விமானம், குமார வயலுார் முருகன் சக்திவேல் வாங்குதல், திருக்குறுகைபிரான், சேனைமுதலியார் திருநட்சத்திரம்.

நவ.10, ஐப்பசி 24: முகூர்த்தநாள், சஷ்டி விரதம், குமாரவயலுார் முருகன் திருக்கல்யாணம், சிக்கல் சிங்காரவேலர் தெய்வானையை மணந்து வெள்ளி ரதக் காட்சி

நவ.11, ஐப்பசி 25: முகூர்த்தநாள், திருவோண விரதம், திருவண்ணாமலை அண்ணாமலையார் இந்திரவிமானம், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கருட வாகனம், திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம் சிக்கல் சிங்காரவேலர் வள்ளியுடன் திருமணக்கோலம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us