தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : பிப் 25, 2022 10:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2022 10:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.

* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.

* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு.

* ஆமை சிவனை பூஜித்த தலம் திருமணஞ்சேரி.

* பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.

* சிவபெருமானின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.

* பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் திருவைந்தெழுத்து எனக் குறிப்பிடுவர்.

* சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர் சிறப்புலி நாயனார்.

* சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர் முருக நாயனார்.

* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.

* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திரநுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

* தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்.

* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை திருப்பாட்டு எனக் குறிப்பிடுவர்.

* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத்தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.

* மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.

* திங்களன்று சிவராத்திரி வந்தால் அதற்கு 'யோக சிவராத்திரி' என்று பெயர்.

* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

* பூலோக கைலாயம் என போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோயில்.

* ஆடும், யானையும் சிவபூஜை செய்த திருத்தலம் திருவாடானை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us