தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : பிப் 25, 2022 10:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2022 10:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்.25, மாசி 13: ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் யானை வாகனம், ராமநாதபுரம் செட்டி தெரு முத்தாலம்மன் பவனி, காளஹஸ்தி சிவன் புறப்பாடு, திருத்தணி முருகன் கிளி வாகனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், கோவை கோனியம்மன் சிம்ம வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்

பிப்.26, மாசி 14: ஏகாதசி விரதம், திருக்கோகர்ணம் சிவன் புறப்பாடு, ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தங்க விருஷப சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், கோவை கோனியம்மன் அன்ன வாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை, காரிய நாயனார் குருபூஜை

பிப்.27, மாசி 15: ராமேஸ்வரம் சுவாமி தங்க கேடயம், அம்மன் முத்தங்கி சேவை, ராமநாதபுரம் செட்டி தெரு முத்தாலம்மன் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம், கோவை கோனியம்மன் காமதேனு வாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம், கரிநாள்

பிப்.28, மாசி 16: பிரதோஷம், திருவோண விரதம், திருவைக்காவூர் சிவன் சஷே வாகனம், ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் அலங்கார வெள்ளி ரதம், ராமநாதபுரம் செட்டித்தெரு முத்தாலம்மன் பவனி, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம், ஒப்பிலியப்பன் ஸ்ரீநிவாசப்பெருமாள் பவனி, சாத்துார் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, கோவை கோனியம்மன் வெள்ளி யானை வாகனம், சகல சிவன் கோயில்களில் மாலையில் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை, கரிநாள்

மார்ச் 1, மாசி 17: மகாசிவராத்திரி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைக்காவூர் கோயில்களில் சிவன் விருஷப சேவை, கோவை கோனியம்மன் திருக்கல்யாணம், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி திருவிழா, கடம்பூர் சண்முகநாதர் ஆறுகால பூஜை, ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் இரவு தங்க குதிரை வாகனம், ராமநாதபுரம் செட்டித் தெரு முத்தாலம்மன் புறப்பாடு, கரிநாள்

மார்ச் 2, மாசி 18: அமாவாசை, துவாபர யுகாதி, கோவை கோனியம்மன் ரதோற்ஸவம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் சிவன் பவனி, ராமேஸ்வரம் சுவாமி, அம்மன் தங்க ரிஷப சேவை, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் நடையழகு சேவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், கோட்செங்கட்சோழ நாயனார் குருபூஜை

மார்ச் 3, மாசி 19: காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம், திருவைக்காவூர் கோயில்களில் சிவன் திருக்கல்யாணம், கோவை கோனியம்மன் குதிரை வாகனத்தில் பாரி வேட்டை, சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் திருமஞ்சனம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us