ADDED : ஏப் 08, 2022 02:58 PM
* ஆங்கிரச முனிவருக்கும், ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் 'பிரகஸ்பதி'. தவத்தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார்.
* கிரகங்களில் ஆண் கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம்,பூரட்டாதி.
* குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார்.
* மனைவி தாரா. வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர்.
* குரு - தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு.
* வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர்.
* எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3.
* திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும்.
