தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/அல்லல் தீர ஆலங்குடி பதிகம் பாடுங்க!

அல்லல் தீர ஆலங்குடி பதிகம் பாடுங்க!

அல்லல் தீர ஆலங்குடி பதிகம் பாடுங்க!


ADDED : ஏப் 08, 2022 02:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2022 02:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீர்ஆர் கழலே தொழுவீர் இதுசெப்பீர்,

வார்ஆர் முலைமங் கையொடும் உடன்ஆகி

ஏர்ஆர் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

கார்ஆர் கடல்நஞ்சு அமுதுஉண் டகருத்தே.

தொழல்ஆர் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்,

குழல்ஆர் மொழிக்கோல் வளையோடு உடன்ஆகி

எழில்ஆர் இரும்பூ ளைஇடங் கொண்டஈசன்

கழல்தான் கரிகான் இடை ஆடுகருத்தே.

அன்பால் அடிகை தொழுவீர் அறியீரே,

மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி

இன்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

பொன்போல் சடையில் புனல்வைத்த பொருளே.

நச்சித் தொழுவீர் கள்நமக்கு இதுசொல்லீர்,

கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி

இச்சித்து இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

உச்சித் தலையில் பலிகொண்டு உழல்ஊணே.

சுற்றுஆர்ந்து அடியே தொழுவீர் இதுசொல்லீர்,

நல்தாழ் குழல்நங் கையொடும் உடன்ஆகி

எற்றே இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

புற்றுஆடு அரவோடு என்புபூண் டபொருளே.

தோடுஆர் மலர்துாய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்,

சேடுஆர் குழற்சே யிழையோடு உடன்ஆகி

ஈடாய் இரும்பூ ளையிடம் கொண்டஈசன்

காடுஆர் கடுவே டுவன் ஆனகருத்தே.

ஒருக்கும் மனத்துஅன் பர்உள்ளீர் இதுசொல்லீர்,

பருக்கை மதவே ழம்உரித் துஉமையோடும்

இருக்கை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

அரக்கன் உரம்தீர்த்து அருள்ஆக் கியவாறே.

துயர் ஆயினநீங் கித்தொழும் தொண்டர்சொல்லீர்,

கயல்ஆர் கருங்கண் ணியொடும் உடன்ஆகி

இயல்பாய் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே.

துணைநன் மலர்துாய்த் தொழும்தொண் டர்கள்சொல்லீர்,

பணைமென் முலைப்பார்ப் பதியோடு உடன்ஆகி

இணைஇல் இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

அணைவுஇல் சமண்சாக் கியம்ஆக் கியவாறே.

எந்தை இரும்பூ ளைஇடம் கொண்டஈசன்

சந்தம் பயில்சண் பையுள்ஞா னசம்பந்தன்

செந்தண் தமிழ்செப் பியபத்து இவைவல்லார்

பந்தம் ஆறுத்து ஓங்குவர் பான்மையினாலே.

திருச்சிற்றம்பலம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us