தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : ஏப் 08, 2022 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2022 02:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வே.ஜோதி, மதுரை

* கோயில் சொத்தை கொள்ளையடித்தால் முடிவு என்னாகும்?

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் தெய்வத்தால் தண்டிக்கப்படுவர்.

கே.மீனாள், பெங்களூரு

* ஆரத்தி எடுக்கும் போது வெற்றிலையில் கற்பூரம் வைப்பது ஏன்?

சுபநிகழ்ச்சி நிறைவு பெற்றதை குறிக்கும் சடங்கு ஆரத்தி. திருஷ்டி போக்கும் விதத்தில் அதில் கற்பூரம் கொளுத்தப்படுகிறது.

எல்.சிதம்பரம், காரைக்குடி

* பெரியவர்களுக்கு சிறியவர்கள் திருநீறு பூசலாமா?

அர்ச்சகர்கள், குருக்கள், சிவாச்சாரியார்கள் வயதில் சிறியவராக இருந்தாலும் திருநீறு, குங்குமத்தை பிறருக்கு பூசலாம். மற்றவர்கள் இதைச் செய்யக் கூடாது.

பி.கமலா, சென்னை

* பிழைப்பு தேடி வெளியூரில் வாழ்கிறோம். குலதெய்வம் தெரியவில்லையே?

உறவினர்களில் பெரியவர்கள், அனுபவசாலிகளின் மூலம் குலதெய்வத்தை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால் இஷ்ட தெய்வத்தையே குலதெய்வமாக ஏற்று வழிபடுங்கள்.

வி.மீனலோசனா, கோவை

* சுவாமிக்கு ரூபாய் அலங்காரம் செய்வது ஏன்?

ரூபாய் என்பது வெறும் காகிதம் அல்ல. அதன் மூலம் தங்கம் வாங்கலாம். எனவே தங்கமாக கருதி பணத்தால் சுவாமிக்கு அலங்காரம் செய்கிறோம்.

எல்.காமாட்சி, புதுச்சேரி

* 'நான்' என்பதில் இருந்து 'நாம்' என்ற நிலைக்கு உயர முடியுமா?

பொம்மலாட்டத்தில் உள்ள பொம்மை போல உயிர்களைக் கடவுள் இயக்குகிறார். உலக இயக்கத்தில் உயிர்களைச் சேர்க்கும், விலக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. இந்த மண்ணில் நாம் வாழப் போவது சிலகாலம் மட்டுமே. இந்த உண்மையை புரிந்து கொண்டால் 'நான்' மறைந்து 'நாம்' என்ற நிலை உருவாகும்.

டி.சுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி

* பிரார்த்தனை, தொண்டு மனப்பான்மை இதில் உயர்ந்தது எது?

விருப்பத்தை நிறைவேற்றும்படி கடவுளை வேண்டுவது பிரார்த்தனை. பிறருக்கு உதவி செய்வது தொண்டு. சுயநலம் இல்லாமல் இருந்தால் இரண்டும் உயர்வானதே.

எல்.பிச்சைமுத்து, சிங்கப்பெருமாள் கோவில்

* இறந்தவர் நினைவு தினத்தில் சுடுகாட்டில் படையல் இடலாமா?

இடக் கூடாது. பிணத்தின்பின் செல்வதைத் தவிர மற்றபடி சுடுகாட்டிற்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது

ஆர்.சுகந்தி, கன்னியாகுமரி

* தினமும் தியானம் செய்தால் என்ன கிடைக்கும்?

மனவலிமை அதிகரிக்கும். உடல்நலம் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்டகாலம் வாழலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us