ADDED : மே 12, 2023 04:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கோயிலில் தெய்வங்களுக்கு முதுகுப் புறத்தைக் காட்டியபடி உட்காராதீர்கள்.
* தன்னைப் போலவே பிறரும் இன்பத்துடன் வாழ வேண்டும் என நினையுங்கள்.
* செவ்வாய், சனிக்கிழமையில் ஜாதகப் பொருத்தம் பார்க்காதீர்கள்.
* நம்பியவர்களை ஏமாற்றுவது பாவம். அவ்வாறு ஏமாற்றுபவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.
* உதவி பெறுவதைக் காட்டிலும், உதவி செய்வதே உயர்ந்தது.
* சூரியன் மறைந்த பிறகு விதை விதைத்தல், ஷேவிங் செய்தல், பூமி பூஜை செய்தல் கூடாது.
* உடன்பிறந்தவர்கள் தாழ்ந்திருந்தால் அவர்களை காப்பாற்றுவது தர்மம்.
* உண்மை பாதையில் நடந்து கடவுளை வணங்குங்கள். அப்போதுதான் அவர் அருள்புரிவார்.

