ADDED : ஜூன் 09, 2023 08:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சிறு வியாபாரியிடம் பேரம் பேசாமல் வாங்கினால், தொலை துாரப் பயணம் வெற்றி அடையும்.
* கன்று போட்ட பத்து நாட்களுக்குட்பட்ட பசு மாட்டின் பாலை அபிேஷகத்துக்கு பயன்படுத்தக்கூடாது.
* பொருளாதாரப் பிரச்னையில் வாடும் மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள். உடல், மன உளைச்சல் தீரும்.
* கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வந்தால், பிரிந்து சென்ற நண்பர் உங்களைத் தேடிவருவார்.
* வீட்டில் பல காலமாக முன்னோர்களால் பூஜிக்கப்பட்டு வந்த ஸாளகிராமம், பாணலிங்கம் போன்றவற்றை தன்னால் பூஜிக்க முடியவில்லை என்பதற்காக பிறரிடம் தரக்கூடாது.
* மஹாவிஷ்ணுவின் 24 பெயர்களில் ஒன்று 'பிரத்யும்னன்'. இந்த நாமத்தை சொன்னால் வலிமை உண்டாகும்.

