
* மனதில் உறுதி இருந்தால், நினைத்ததை அடைவது எளிய செயல்.
* ஒருவர் என்னதான் படித்தாலும், அவருடைய இயல்பான அறிவே மேலோங்கி நிற்கும்.
* தான் கற்றவற்றை கற்றவர் முன் தெளிவாகச் சொல்பவரே, உண்மையில் கற்றவர்.
* தேர் கடலிலும், கப்பல் தரையிலும் ஓடாது. அதுபோல் தனக்குரிய இடத்தில்தான் ஒருவர் சிறப்பாக செயல்படுவார்.
* ஒருசெயலை ஒருவர் செய்து முடிப்பார் என அறிந்தால், அதை அவரிடமே ஒப்படைத்துவிட வேண்டும்.
* தாய் பசியில் இருந்தாலும், பெரியவர்கள் பழிக்கும் செயலை செய்யாதே.
* செயல் வேறு, சொல் வேறு என செயல்படுபவரின் நட்பு கனவிலும் இனிமை தராது.
* கோடிப் பொருள் அடுக்கிக் கொடுத்தாலும், ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை.
* முயற்சி செய்தால் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வரும்.
* மது அருந்தியவனிடம் நல்லதை சொல்லி திருத்துவது என்பது, நீரில் மூழ்கியவரை தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
* பேராசை என்னும் பெருந்துன்பம் தொலைந்தால், இன்பம் இடைவிடாமல் வரும்.
* மயிலிறகுதான் என்றாலும் அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறியும்.
* உலகத்தை வெல்ல வேண்டும் என நினைப்பவர், கலங்காமல் உரிய காலத்திற்காக காத்திருப்பார்.
நம்பிக்கை தருகிறார் திருவள்ளுவர்

