sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஆக 04, 2023 10:26 AM

Google News

ADDED : ஆக 04, 2023 10:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சாளகிராமக்கல் என்பது நேபாள நாட்டில் கண்டகீ நதியில் இருந்து கிடைக்கிறது. இதை வீட்டில் பூஜித்து வந்தால் புண்ணியம் சேரும்.

* தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்கான பூக்கள் செடியில் இருந்து அன்றன்று பறிக்கப்பட்டதாக இருப்பது சிறப்பு.

* ஒருவர் செய்து வரும் பூஜை, ஜபம், ஹோமம், விரதம் போன்றவற்றை அவரால் செய்ய இயலாதபோது பிறர் செய்யலாம். இதற்கு ப்ரதிநிதி நியாயம் எனப்பெயர். மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும், தந்தைக்கு மகனும் (மகளும்), அண்ணனுக்கு தம்பியும் பிரதிநிதிகள். முன் நபர்களுக்காக பின் சொல்லிய நபர் புண்ணியத் தலங்கள் செல்வது, தர்ம செயல்களை செய்யலாம்.

* சிவபெருமானுக்கு உபயோகித்த பொருட்கள் சிவபக்தரான சண்டிகேஸ்வரரைச் சேரும். எனவே கோயிலில் சண்டிகேஸ்வரர் இருக்கும் வடக்குப் பகுதியில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த ஜலம் விழும்படி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பசுவின் முகம் போன்று இருப்பதால் கோமுகம் எனப்பெயர். இதை ஸோமஸூத்ரம் என்றும் சொல்லலாம். ஸோமன் என்றால் வடக்கு திசை.

* ஒருமுறை சிவபெருமான் அழுததால் அவரது கண்ணீரில் இருந்து வெள்ளி தோன்றியது. எனவே மங்களமான யாகங்களில் வெள்ளியை தட்சணையாக தரக்கூடாது.

* நாம் பூஜிக்கும் தெய்வவிக்ரஹம் விரிசல், உடைந்ததாக இருக்கக்கூடாது.






      Dinamalar
      Follow us