தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : அக் 20, 2023 05:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2023 05:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கல்வி, கலைச் செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவள் சரஸ்வதிதேவி.

* கலைமகள், வாக்தேவி, வாகீஸ்வரி, மகா சரஸ்வதி, பாரதி, வாணி, சகலகலாவல்லி என சரஸ்வதியை போற்றுவர்.

* அனைத்து உயிர்களின் நாவிலும் இவள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.

* ஞானத்தை கொடுப்பதால் ஞானக்கொடி, ஞானக்கொழுந்து, ஞான அமலி, ஞானி பிராட்டி என சிறப்பிக்கப்படுகிறாள்.

* கவிஞர்களின் நாவில் குடியிருப்பதால் நாமடந்தை, நாமிசைக் கிழத்தி, நாவுக்கரசி என அழைக்கப்படுகிறாள்.

* கிரேக்கர்கள் 'அதீனே' என்றும், ரோமானியர்கள் 'மினர்வா' என்றும் வழிபடுகின்றனர்.

* மூன்று முகங்களும் ஆறுகரங்களும் கொண்ட இத்தேவியை 'மஞ்ஜுஸ்ரீ' என பவுத்தர்களின் தந்திரநுால்கள் சொல்கின்றன.

* சமண சமயத்தின் சிறந்த காவியமான சீவகசிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' எனும் பகுதியை திருத்தக்கதேவர் இயற்றியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us