ADDED : ஏப் 02, 2014 01:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. அம்பிகை மீது துர்வாசர் பாடிய ஸ்தோத்திரம்.......
ஆர்யா த்விசதி
2. மத்வாச்சாரியார் எட்டு மடங்களை நிறுவிய தலம்......
உடுப்பி
3. முகூர்த்தம் என்பதன் கால அளவு.........
மூன்றே முக்கால் நாழிகை(90 நிமிடம் அல்லது ஒன்றரை மணி நேரம்)
4. துஷ்ட சக்தியை அடக்கி சிவன் ஆடும் நடனம்.....
பிரதோஷ நடனம்
5. முதல் 11 திருமுறைகளைத் தொகுத்தவர்......
நம்பியாண்டார் நம்பி
6. பாவத்தைப் பொசுக்கும் தன்மை கொண்ட மலை.......
வேங்கடம் (திருப்பதி) (வேம்-பாவம், கடம்-பொசுக்குதல்)
7. புராணத்தில் இடம்பெற்ற மகேந்திரகிரி எங்குள்ளது?
ஒடிசா
8. கங்கைநதியின் உற்பத்தி ஸ்தானம்......
கங்கோத்ரி
9. கலியுகம் எத்தனை ஆண்டுகளைக் கொண்டது?
4,32,000
10. பூமியில் தர்மம் தழைத்திருந்த யுகம்.......
கிருதயுகம்