ADDED : ஏப் 29, 2014 01:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. வாசல்படியில் நிலைக்கு மேலே அருள்பவள்......
கஜலட்சுமி
2. வடநாட்டில் லட்சுமியின் வாகனம்......
ஆந்தை
3. லட்சுமியின் அம்சமான பசுவை...... என்பர்
கோலட்சுமி
4. லட்சுமி தாயாருக்குரிய வேதமந்திரம்.....
ஸ்ரீ சூக்தம்
5. லட்சுமி மூன்று முகங்களுடன் அருளும் தலம்.....
மும்பை மகாலட்சுமி கோயில் (காளி, லட்சுமி, சரஸ்வதி)
6. திருமகள் அந்தாதி பாடியவர்.....
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
7. சிம்மவாகினியாக லட்சுமி இருக்கும் தலம்.........
மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர்
8. லட்சுமியின் அம்சமாக கருதப்படும் மரங்கள்......
நெல்லி, மா, வில்வம்
9. திருமகளின் பெருமை பேசும் புராணம்.....
பிரம்ம வைவர்த்த புராணம்
10. லட்சுமி தேவிக்காக சிவன் ஆடிய நடனம்...
லட்சுமி தாண்டவம்