
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனைவரும் போற்றும் நெடுமாலும் நீயும் அடற்கருடன்
தனை எழில் வாகனமாக் கொண்டு என் உள்வரும் சத்தியத்தைப்
பினையுள்ள பேர் அறியத் தக்கவாறருள் பெய்வது என்றோ
மனை எனத் தாமரைப் பூவை எல்லாம் கொள்ளும் மாணிக்கமே.
பொருள்: தாமரை மலரை வீடாக கொண்டிருக்கும் திருமகளாகிய லட்சுமியே! மாணிக்கம் போன்றவளே! கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலும், நீயும், என் உள்ளத்தில் வீற்றிருக்கும் உண்மை நிலையை அனைவரும் அறியுமாறு செய்யும் நாள் எந்நாளோ?