ADDED : ஆக 26, 2014 04:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. உணவில் விருப்பம் கொண்டதால் விநாயகரை........என்பர்
போஜன பிரியர்
2. விநாயகரை 'விகடர்' என்று சொல்வதன் பொருள்......
வேடிக்கை குணம் கொண்டவர்
3. ஐந்துமுக விநாயகரின் பெயர்......
ஹேரம்ப கணபதி
4. சந்தோஷிமாதா என்று போற்றப்படுபவள்......
விநாயகரின் மகள் (வடமாநிலங்களில் கோயில் உண்டு)
5. விநாயகருக்கு எருக்க இலையால் அர்ச்சித்தால் கிடைக்கும் பலன்......
சகல சவுபாக்கியம்
6. பாரதியார் வணங்கிய விநாயகர் எங்கிருக்கிறார்?
புதுச்சேரி (மணக்குள விநாயகர்)
7. விநாயகர் புராணத்தை எழுதியவர்......
கச்சியப்ப முனிவர்
8. வடநாட்டில் விநாயகரின் சின்னமாகத் திகழ்வது........
ஸ்வஸ்திக்
9. கல்விவளம் பெற அருள்புரியும் விநாயகர்.......
வித்யா கணபதி
10. விநாயகரும் அனுமனும் இணைந்த கோலம்....
ஆத்யந்த பிரபு