
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்!
மெளநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்!!
யச்சாபி ஸர்வ பூதாநாம் பீஜம் தத ஹமர்ஜுந!
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந் மயாபூதம் சராசரம்!!
பொருள்: வெற்றி பெற விரும்புவோரிடம் உள்ள ஆக்க சக்தியாக இருப்பவன் நானே! அடக்குபவர்களின் அடக்கும் சக்தியாக இருப்பவனும் நானே! மறைக்க வேண்டியவற்றை காப்பதற்காக மவுனமாக இருப்பதும் நானே! ஞானிகளிடம் இருக்கும் தத்துவ ஞானமும் நானே! உயிர்கள் எல்லாம் தோன்றுவதற்கு மூல காரணமான விதையும் நானே! ஏனெனில் நானின்றி உலகில் ஏதுமில்லை.

