
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்:
ஸகேதி மத்வா ப்ரஸபம் யதுக்தம் ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி!
அஜாநா மஹிமாநம் தவேதம் மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி!!
யச்சா வஹாஸார்த மஸத்க்ருதோஸி விஹார ஸய்யாஸந போஜநேஷு!
ஏகோத வாப்யச்யுத தத்ஸமக்ஷம் தத்க்ஷாமயே த்வாமஹம ப்ரமேயம்!!
பொருள்:
பகவானே! தங்களின் பெருமை அறியாமல் அன்பினாலும், அசட்டையாலும், ''கிருஷ்ணா! யாதவா! நண்பனே!' என நான் துடுக்காக அழைத்து வந்தேன். அச்சுதனே! கேளிக்கை பேசும் போதும், படுக்கையில் உறங்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், உண்ணும் போதும், நீங்கள் தனியாக இருக்கும் போதும் அல்லது நண்பர்களின் முன்னிலையிலும் கூட கேலியாக தங்களை அவமதித் திருப்பேன். நினைத்துப் பார்க்க முடியாத மகிமை கொண்ட தங்களுக்கு செய்த குற்றங்கள், குறைகளை பொறுத்தருள வேண்டுகிறேன்.