
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்லோகம்
ஸர்வ கர்மாணி மநஸா ஸந்யஸ்யாஸ்தே ஸுகம் வஸீ!
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்!!
ந ப்ரஷ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத் விஜேத் ப்ராப்ய சாப்ரியம்!
ஸ்திர புத்தி ரஸம் மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:!!
பொருள்: மனதை தன்வசப்படுத்திக் கொண்ட மனிதன் ஒன்பது வாசல் கொண்ட இந்த உடல் என்னும் வீட்டில் சத் சித் ஆனந்தம் என்னும் பரம்பொருளை தியானித்தபடி மகிழ்ச்சியில் திளைப்பான். விருப்பமான பொருளை அடையும் போது மகிழ்ச்சி கொள்ளாமலும், விரும்பாததை அடையும் போது கலக்கம் அடையாமலும் இருக்கும் ஞானிகள் கடவுள் சிந்தனையில் ஈடுபட்டு மகிழ்ச்சியோடு இருப்பர்.