
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத் விஜேத்ப்ராப்ய சாப்ரியம்!
ஸ்திர புத்தி ரஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:!!
யே ஹி ஸம்ஸ்பர்ஸஜா போகா து:க யோநய ஏவ தே!
ஆத்யந்தவந்த: கெளந்தேய ந தேஷு ரமதே புத:!!
பொருள்: விரும்பியதை அடையும் போது மகிழ்ச்சி கொள்ளாமலும், விரும்பாததை அடையும் போது கலக்கம் இல்லாமலும் வாழ்பவனே ஞானி. அவன் எப்போதும் கடவுளையே சிந்திக்கிறான். ஐம்புலன்கள், அவற்றால் நுகரப்படும் பொருட்களால் ஏற்படும் அனுபவம் இன்பமாக இருந்தாலும், அவையே துன்பத்திற்கும் காரணமாக உள்ளன. அதனால் அறிவாளிகள் அவற்றில் இன்பம் காண்பதில்லை.