ADDED : அக் 23, 2019 02:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்
மிளகு - 25 கிராம்
சீரகம் - 25 கிராம்
இஞ்சி - 50 கி(தோல் சீவியது)
சுக்கு - ஒரு துண்டு (துாளாக்கியது)
திப்பிலி - 10 கிராம்
நெய் - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேன் - நான்கு டீஸ்பூன்
செய்முறை: மிளகு, சீரகம், இஞ்சியை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து (வடிகட்டவும்) அரைத்த விழுதை வெல்லநீரில் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும்.
கொதித்து கெட்டியானவுடன் நெய்விட்டுக் கிளறி இறக்கி விடவும். ஆறியவுடன் தேன் விட்டுக் கிளறி பாட்டிலில் எடுத்து வைக்கவும். வாயு தொந்தரவு, அஜீரணம், வயிற்று வலிக்குச் சிறந்த மருந்து.