ADDED : ஜூலை 23, 2023 04:07 PM

ஜூலை 20 நினைவு நாள்
* பிறர் மீது அன்பாக இருங்கள். அதுதான் உண்மையான தெய்வீகமாகும்.
* பக்தியின் மூலம் முடியாத செயலையும் முடிக்கலாம்.
* எந்த அளவுக்கு பற்று இல்லாமல் இருக்கிறாயோ அந்த அளவுக்கு மனம் அமைதியாகும்.
* கடவுளிடம் சரணடைந்துவிட்டால் அவரே உன் வாழ்க்கையை பார்த்துக்கொள்வார்.
* மன நிம்மதி வேண்டுமானால் பிறரிடம் குறைகாணாதே. உன் தவறுகளை சரிசெய்.
* பொறுமையாக இரு. அதுவே உனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும்.
* பொறுமைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
* சொற்களால் யாரையும் காயப்படுத்தாதே.
* ஒரு செய்தி உண்மையாய் இருந்தாலும் அது பிறர் விரும்பவில்லையெனில் கூறாதே.
* மேகத்தை காற்று விலக்குவதுபோல் கடவுளின் துணையுடன் உலகப்பற்றைத் துறந்துவிடு.
* தைரியத்தை இழக்காமல் பிரார்த்தனை செய். உரிய காலத்தில் வேண்டியவை கிடைக்கும்.
* சாதனைக்கேற்ற காலம் இளமைப் பருவமே. அதை வீணடிக்காதே.
* உண்மையான அன்பின்றி கடவுளை உணர முடியாது.
* சோம்பல் குணத்தினால் உடலும் மனமும் கெடுகிறது.
* மன அமைதிக்கு நிகரான புதையல் இல்லை.
* மனபலத்துக்கு நிகரான நல்லொழுக்கமும் இல்லை.
என்கிறார் சாரதாதேவியார்

