திருவாசகம் - பாடல் - 154 - மாணிக்க வாசகர் பாடுகிறார்
திருவாசகம் - பாடல் - 154 - மாணிக்க வாசகர் பாடுகிறார்
ADDED : டிச 31, 2010 03:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லா மனத்துக்குக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானாய்!
பொருள்: நானோ கல்வி ஞானம் பெறாத அறிவிலி. நாயை விட கேவலமானவன்.
இறைவனோ எல்லா வல்லமையும் பெற்றவன். திருப்பெருந்துறையை ஆள்கின்றவன். அருள் என்னும் பித்தேறச் செய்து என்னை ஆட்கொண்டான். கல்லாக இருந்த மனதைக் கனியாக மாற்றினான். கருணை வெள்ளத்தில் மூழ்கச் செய்து தீவினைகளைக் களைந்தான். தில்லைநகரில் சிற்றம்பலத்தில் வீற்றிருக்கிறான். பாய்ந்து செல்லும் காளையில் பவனிவரும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி அம்மானை ஆடுவோம்.
குறிப்பு: அம்மானை என்பது பெண்கள் ஆடும் ஒருவகை ஆட்டம்.