ADDED : ஏப் 06, 2012 12:07 PM

அ நிறம் | அளவு
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ
பொருள்: சிவனே! உன் இரு பாதங்களையும் என் தலை மீது வைத்து அருள்செய்தாய். இதுநாள் வரையில் துணை என்று இருந்த உறவுகளை விட்டு நீங்கிவிட்டேன். நீர் வளம் மிக்க தில்லையம்பலத்தில் நடனமாடுகின்றவனே! பிறவிக்கடலில் தோணியாக வருபவனே! உன் பெருமைகளைப் பாடியபடியே பூக்களைப் பறிப்போம்.
