தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இதுவே உலகில் உயர்ந்த பரிசு

இதுவே உலகில் உயர்ந்த பரிசு

இதுவே உலகில் உயர்ந்த பரிசு


ADDED : டிச 31, 2010 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2010 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு பணியைச் சிறப்பாகச் செய்ததற்காக ஆயிரமோ, லட்சமோ பரிசு பெறுவது பெரிய விஷயமல்ல. அதை ÷ஷாகேசில் வைக்க முடியாது. அந்த பரிசுடன் தரப்படும் பாராட்டுப் பத்திரம் இருக்கிறதே! அதை பிரேம் போட்டு பிறர் பார்வையில் படும்படி வைக்கிறார்கள். அதைப்பற்றி ஒவ்வொருவரும் கேட்கும் போதெல்லாம் ஆனந்தம் ஏற்படுகிறது. தங்களுக்கு பேருதவி புரிந்த அனுமனுக்கு இவ்வாறு ஒரு பரிசளிக்க விரும்பினர் சீதாராமர். தன் முத்துமாலையைக் கழற்றிய சீதை,''இதை யாருக்கு அளிக்கலாம்?'' என்பது போல ராமனின் முகத்தைப் பார்த்தாள். நேரடியாக 'அனுமனுக்கு கொடு' என்றால் மற்றவர்களுக்கு வருத்தம் வரும். பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்கு இருக்கிறதோ அவருக்குக் கொடு,' 'என்று சொல்லிவிட்டார். சீதாதேவி அடுத்த கணமே அனுமனிடம் அதை நீட்டி விட்டாள். முத்தாரத்துக்கு மதிப்பில்லை. ராமன் குறிப்பிட்ட அந்த மூன்று குணங்களுக்கும் மதிப்பு மிகப்பெரியது. அதற்குச் சொந்தக்காரர் நம் ஆஞ்சநேயர். அந்த குணங்களெல்லாம் நம்மையும் ஒட்டிக்கொள்ள அவரது பிறந்த நாளில் பிரார்த்திப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us