ADDED : ஜூன் 08, 2018 04:07 PM

அ நிறம் | அளவு
கிருஷ்ணருக்கு பிடித்த அவல் லாடுவை பிரசாதமாக படைத்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்தது எல்லாம் பலிக்கும்.
என்ன தேவை
அவல் - 200 கிராம்
பொட்டுக்கடலை - 100 கிராம்
சர்க்கரை - ¼ கிலோ
நெய் - 200 கிராம்
தேங்காய் - ¼ மூடி
ஏலப்பொடி - ½ டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
எப்படி செய்வது: அவல், பொட்டுக்கடலையை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து சன்னமாக இடித்து வைத்து கொள்ளவும். முந்திரிப்பருப்பை சிறிய துண்டுகளாக்கவும். சர்க்கரையை இடித்துச் சலித்து, கடலை மாவுடன் சேர்த்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவிப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுக்கவும். நெய்யை காய்ச்சி, மாவு, தேங்காய், முந்திரிப்பருப்பு, ஏலப்பொடியை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
