ADDED : ஜூன் 08, 2018 04:03 PM
ஜூன் 9, வைகாசி 26, சனி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு, திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.
ஜூன் 10, வைகாசி 27, ஞாயிறு: ஏகாதசி விரதம், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரங்கமன்னாருடன் கண்ணாடி மாளிகை எழுந்தருளல், துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, கீழ்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
ஜூன் 11, வைகாசி 28, திங்கள்: பிரதோஷம், கழற்சிங்க நாயனார் குருபூஜை, சிதம்பரம், செப்பறை நடராஜர் கோயிலில் ஆனிஉத்திர உற்ஸவம் ஆரம்பம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேகம், சங்கரன் கோவில் கோமதி அம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
ஜூன் 12, வைகாசி 29, செவ்வாய்: கார்த்திகை விரதம், மாத சிவராத்திரி, திருப்பரங்குன்றம் முருகன் மயில் வாகனம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சந்திரசேகர உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
ஜூன் 13, வைகாசி 30, புதன்: அமாவாசை விரதம், திருக்கோட்டியூர் நம்பி திருநட்சத்திரம், நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் சிவன் பவனி.
ஜூன் 14, வைகாசி 31, வியாழன்: சிதம்பரம் நடராஜர் எழுந்தருளல், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
ஜூன் 15, ஆனி 1, வெள்ளி: சந்திர தரிசனம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருத்தணி முருகன் கிளிவாகனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு, கரிநாள்.
