ADDED : டிச 22, 2017 10:26 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீமத் கோகுல ஸர்வஸ்வம்
ஸ்ரீமத் கோகுல மண்டனம்
ஸ்ரீமத் கோகுல த்ருக்தார:
ஸ்ரீமத் கோகுல ஜீவனம்!!
பொருள்: ஸ்ரீதேவியுடன் சேர்ந்திருக்கும் கோபாலனே! கோகுலத்திற்கு எல்லாமாகவும் இருப்பவரே! கோகுலத்தின் அலங்காரமே! கோகுலத்தில் உள்ளவர்களுக்கு கண்களின் கருவிழி போல் இருப்பவரே! கோகுலத்திற்கு உயிராக இருப்பவரே! உம்மை வணங்குகிறோம்.
குறிப்பு: ஸ்ரீமத் கோகுலாஷ்டக ஸ்லோகம்.
