ADDED : செப் 07, 2018 03:22 PM

அ நிறம் | அளவு
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்!
உமா ஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்!!
பொருள்: யானை முகம் கொண்டவரே! பூத கணங்களால் வழிபடப்படுபவரே! விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை ரசித்து உண்பவரே! உமையவளின் பிள்ளையே! துன்பம் தீர்ப்பவரே! விநாயகப் பெருமானே! உம் திருவடித் தாமரைகளைப் போற்றுகிறேன்.
