நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே!
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்!!
பொருள்:கோடி மன்மதர்கள் ஒன்று சேர்ந்த அழகுடையவரும், மனம் விரும்பியதை தந்தருள்பவரும், வஜ்ராயுதத்தைக் கையில் தாங்கியிருப்பவரும், குமரக்கடவுளுமாகிய முருகப்பெருமானுக்கு மங்களம் உண்டாகட்டும்.
மனப்பாடப்பகுதி
தீபஒளி வழிபாட்டால் தீமையெல்லாம் ஓடும்
தேவீ! உன் அருளாலே செல்வமெல்லாம் கூடும்
பாபவழி இப்போதே பாழ்பட்டுப் போகும்
பக்திமிகும் முக்திவரும்பரவசமே யாகும்.
பொருள்: தீப ஒளியை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தீமையெல்லாம் பறந்துவிடும். அம்பாளின் அருள்கிடைப்பதால் செல்வம் பெருகும். செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைப்பதுடன், பக்திப் பரவசத்துடன் பிறப்பற்ற நிலையும் கிடைக்கும்.