ADDED : நவ 19, 2010 03:46 PM
1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை
2. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்
3. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)
4. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை
5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
6. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
7. ''கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12
8. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
9. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
10 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)