
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமாம் மேதா ஸுரபிர்விஸ்வரூபா
ஹிரண்யவர்ணா ஜகதீ ஜகம்யா:
ஊர்ஜஸ்வதீ பயஸா பிந்வமாநா
ஸா மாம் மேதா ஸுப்ரதீகா ஜுஷாந்தம்!!
பொருள்: மேதாவியாகும் அளவு அறிவைத் தருபவளும், நறுமணம் போல் எங்கும் பரவியிருப்பவளும், அனைத்தையும் சோதித்துஅறிய வல்லவளும், பொன்னிற எழுத்துக்களை உடையவளும், என்றும் நிலைத்திருப்பவளும், உயர் உண்மைகளைத் தேடுபவர்களால் எப்போதும் நாடத்தக்கவளும், ஆற்றலின் இருப்பிடமானவளும், பால் முதலான செல்வங்களால் வளர்ப்பவளுமாகிய மேதாதேவி, மலர்ந்த முகத்துடன் வந்து எனக்கு நன்மையை அருளட்டும்.
குறிப்பு: இந்த ஸ்லோகத்தையோ, பொருளையோ வாசிக்கும் குழந்தைகள் அதிமேதாவிகளாய் திகழ்வர் என்பது ஐதீகம்.

