
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்!
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ!!
பொருள்: தாயாய் இருந்து, வணங்கியவர்களுக்கு நன்மை தருபவளே! மன வியாதியைப் போக்கியருளும் உன்னை வணங்குகிறேன். குகப்பெருமானாகிய முருகனின் திருக்கரத்தை அலங்கரிப்பவளே! சக்திவேலே! உனக்கு அநேக நமஸ்காரம். எப்போதும் என் இதயத்தில் இருந்து அருள்வாயாக.
குறிப்பு: முருகனின் கையிலுள்ள வேலை பெண்ணாகக் கருதி, ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகம் இது.