
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொருள்: சொல் துணை என போற்றப்படும் வேதங்களால் புகழப்படுபவனே! ஒளி வடிவான இறைவனே! உன் திருவடிகளை மனம் ஒன்றி வணங்கினால், கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தள்ளி விட்டாலும், நல்ல துணையாக 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் துணை நிற்கும்.