நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்பத்ருமம் ப்ரணமதாம் கமலாருணாபம்
ஸ்கந்தம் புஜத்வயமனாமயமேக வக்த்ரம்!
காத்யாயனீ ப்ரியஸுதம் கடிபத்தவாமம்
கௌபீன தண்ட தரதக்ஷிண ஹஸ்தமீடே!!
பொருள்: கற்பக மரம் போல கேட்ட வரம் தருபவரே! செந்தாமரை போல பிரகாசம் கொண்டவரே! இரு கைகளாலும் அருள்பவரே! அண்டியவர்களின் துன்பம் தீர்ப்பவரே! காத்யாயினி தேவியின் பிரியமான புத்திரரே! இடுப்பில் இடக்கையை உடையவரே!
கவுபீனம் என்னும் கோவணத்தை அணிந்தவரே! வலக்கையில் தண்டாயுதம் தாங்கியவரே! கந்தப் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.
குறிப்பு: இது பழநியாண்டவர் தியான ஸ்லோகம்

