
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எந்தாய் போற்றி பரங்கிரியில் இறைவா போற்றி செந்தூர் வாழ்
செந்தா போற்றி பழனிமலைத் தேவே போற்றி தேவேசன்
மைந்தா போற்றி யோகத்தின் வாழ்வே போற்றி சோலைமலைக்
கந்தா போற்றி திருவிலஞ்சிக் கடவுளே போற்றி
பொருள்: என் தாயானவரே! திருப்பரங்குன்றத்து இறைவனே! செந்தூரில் வாழ்பவரே! பழநிமலையில் வீற்றிருக்கும் தெய்வமே! சிவன் மகனே! யோகவாழ்வு தருபவரே! சோலைமலையில் வாழும் கந்தப் பெருமானே! இலஞ்சியில் உறையும் கடவுளே! உம்மைப் போற்றுகிறேன்.
குறிப்பு: குற்றாலம் தல புராண பாடல்

