ADDED : அக் 29, 2021 02:22 PM

* எப்போதும் வேலை, வேலை என்று சுற்றிக் கொண்டிருக்காமல் இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்வது நல்லது.
* யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகளால் மனம் தெளிவு பெறும்.
* எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்தி விட முடியாது. அது தேவையும் கிடையாது.
* முடிந்த சமூகப்பணிகளில் ஈடுபடுங்கள். மற்றவர்களையும் உற்சாகப்படுத்துங்கள். எந்த பணியில் ஈடுபட்டாலும் ஆத்மார்த்தமாக செய்யுங்கள். வெறுப்புடன் வேலை செய்வதை விட செய்யாமல் இருப்பது மேல்.
* எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் பணியைக் காதலியுங்கள். திருப்தி மட்டுமல்ல... நல்ல அனுபவம் பணியின் மூலம் கிடைக்கும்.
* உங்கள் விருப்பம், தேவைகளை மட்டுமே சிந்திக்காதீர்கள். அது மனஉளைச்சலில் தள்ளி விடும். உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கூர்ந்து கவனியுங்கள்.
* விருப்பு, வெறுப்புக்கு எல்லை கிடையாது. யாரேனும் உதவி கேட்டால் எதிர்பார்ப்பு இன்றி உதவுங்கள். அதன் பலன் திரும்ப கிடைக்கும் உங்களுக்கே தெரியாமல்.
