sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

ரங்கநாதருடன் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க வேண்டுமா?

/

ரங்கநாதருடன் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க வேண்டுமா?

ரங்கநாதருடன் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க வேண்டுமா?

ரங்கநாதருடன் மகிஷாசுரமர்த்தினியை தரிசிக்க வேண்டுமா?


ADDED : ஜூன் 01, 2010 12:10 PM

Google News

ADDED : ஜூன் 01, 2010 12:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரங்கநாதரை இஷ்டதெய்வமாக வழிபட்டு வந்த பல்லவ மன்னன் ஒருவனது அரண்மனை நந்தவனத்தில் பூக்கள் திருட்டுபோயின. திருடனைப் பிடிக்க எத்தனையோ தடவை முயற்சித்தும் பலனில்லை. இறுதியில் மன்னனே காவலுக்கு சென்றான். அப்போது தோட்டத்துக்குள் புகுந்த வெள்ளை வராகம்(பன்றி) ஒன்று பூக்களை உண்பதைக் கண்டான். பன்றி மீது அம்பு தொடுத்தான். ஆனால், அது ஓட்டம் பிடித்தது. அதை மன்னன் விரட்டினான். அது ஒருமலைக்குகையில் நுழைந்து மறைந்தது. மன்னன் விடாமல் மலைக்குள் நுழைந்தான், அங்கே பள்ளி கொண்டிருந்த பெருமாளைக் கண்டு மெய்சிலிர்த்தான்.

""காஞ்சியின் மன்னனே! உன் பக்திக்கு மயங்கி தரிசனம் தருவதற்காகவே வராகமாக (பன்றி) வந்தேன்,'' என்று அசரீரி ஒலித்தது. தனக்கு கிடைத்த பாக்கியத்தை எண்ணி மன்னன் மகிழ்ந்தான். அவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இத்தலமே விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோயில் ஆகும். செஞ்சியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் உள்ளது. மலைக்கோயிலான இதை 160 படிகளைக் கடந்தால் அடையலாம். இங்கு தவம்செய்த மகிஷாசுரமர்த்தினிக்கு அருள்புரிய ரங்கநாதராக, பெருமாள் இங்கு தோன்றியதாக தல வரலாறு கூறுகிறது. கோயில் பாறையில் புடைப்புச்சிற்பமாக மகிஷாசுரமர்த்தினியைத் தரிசிக்கலாம். பெருமாள் தெற்கு நோக்கி தலைவைத்து சயனக்கோலத்தில் காட்சி தருகிறார். தேசிங்குராஜன் இந்தப் பெருமாளை வணங்கியே தனது செயல்பாடுகளைத் துவக்கியுள்ளான்.






      Dinamalar
      Follow us