sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

பிரத்யங்கிராவை வணங்க "இலை' போதும்

/

பிரத்யங்கிராவை வணங்க "இலை' போதும்

பிரத்யங்கிராவை வணங்க "இலை' போதும்

பிரத்யங்கிராவை வணங்க "இலை' போதும்


ADDED : ஜூன் 01, 2010 12:11 PM

Google News

ADDED : ஜூன் 01, 2010 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்சபாண்டவர்கள் காட்டில் வசித்த போது, சக்திதேவியின் சிலையைக் கண்டனர். அந்த தேவியை பூஜிக்கபூக்களைத் தேடி அலைந்தனர். பூ கிடைக்காததால், ஒரு ஆலமரத்தின் இலைகளை பூக்களாக எண்ணித் தூவி தேவியை வணங்கினர். தேவியும் அவர்களுக்கு அருள்செய்தாள். பக்திக்கு தேவை இன்ன பொருள் என்பது முக்கியமல்ல. நிஜமான பக்தியுடன் எந்தப் பொருளை காணிக்கையாக்கினாலும் அதை இறைவன் ஏற்பான் என்பதற்கு இது உதாரணம். பஞ்சபாண்டவர் வழிபாடு செய்த இந்த இடம் தற்போது "அய்யாவாடி' என்று அழைக்கப்படுகிறது. சிவனின் அம்சமான சரபேஸ்வர மூர்த்தியின் இரண்டு இறக்கைகளில் இரண்டு சக்திகள் உள்ளனர். ஒரு சக்தி சூலினி துர்க்கை. மற்றொரு சக்தி பிரத்யங்கிரா. இவளை "அதர்வண பத்ரகாளி' என்றும் அழைப்பர். எதிரிகளை ஒடுக்கி நம்மைக் காப்பவளாக விளங்கும் இவளை அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு. ராவணனின் பிள்ளையான மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவனான இந்திரனை வெல்லும் சக்தியை பிரத்யங்கிராதேவியே அளித்தாள். அய்யாவாடியில் அமாவாசை நாளில் நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பழங்கள், பூக்களுடன், மிளகாய் வத்தலையும் யாகத்தீயில் இடுவர். எவ்வளவு வத்தலை தீயிலிட்டாலும் நெடி தெரிவதில்லை.






      Dinamalar
      Follow us