டிச.29 மார்கழி 14: அஷ்டமி விரதம், பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுதல், இயற்பகை நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் அஷ்டமி பிரதட்சணம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜப்பெருமாளுக்கு திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.
டிச.30 மார்கழி 15: மதுரை செல்லத்தம்மன் உற்ஸவம் ஆரம்பம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் பெருமாள் அனுமந்த சேவை, ஆரோக்கிய ஸ்நானம், கண்ணுாறு கழிக்க நல்ல நாள், சூரிய வழிபாட்டு நாள். ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி வழிபடுதல்.
டிச.31 மார்கழி 16: மானக்கஞ்சார நாயனார் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம், அகோபிலமடம் 4வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.
ஜன.1 மார்கழி 17: மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனம், வேலுார் மாவட்டம் சோழிங்கநல்லுார் கொண்டப்பாளையம் லட்சுமிநரசிம்மர் படித்திருவிழா, வைத்தீஸ்வரன் கோவில் அங்காரக பகவான் புறப்பாடு
ஜன.2 மார்கழி 18: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், காஞ்சிப்பெரியவர் நினைவுநாள், மதுரை செல்லத்தம்மன் யானை வாகனம், திருப்பரங்குன்றம் முருகன் வீதியுலா, திருவெண்காடு சுவேதராண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு,
ஜன.3 மார்கழி 19: பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிேஷகம் செய்து வழிபடுதல், குரு வழிபாட்டு நாள். தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல். திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம், மதுரை செல்லத்தம்மன் குதிரை வாகனம்
ஜன.4 மார்கழி 20: மாதசிவராத்திரி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், தொண்டரடிப்பொடியாழ்வார், பெரியநம்பி திருநட்சத்திரம், லட்சுமி வழிபாட்டு நாள். தாயாருக்கு பால் பாயாசம் படைத்து வழிபடுதல். திருத்தணி முருகன், மதுரை செல்லத்தம்மன் சப்பர பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கு

