தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 10, 2019 03:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2019 03:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜன.12 மார்கழி 28: விநாயக சஷ்டி, சஷ்டி விரதம், முருகனுக்கு அபிேஷகம், நெல்லை, குன்றக்குடி, பழநி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமிமலை கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவி., ஆண்டாள் சுந்தரராஜர் திருக்கோலம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கைலாச, காமதேனு வாகனம், விவேகானந்தர் பிறந்தநாள்.

ஜன.13 மார்கழி 29: வாயிலார் நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனம், ஸ்ரீவி., ஆண்டாள் கனக தண்டியல், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் கோயில்களில் உற்ஸவம் ஆரம்பம், திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை.

ஜன.14 மார்கழி 30: போகி, ஸ்ரீவி., ஆண்டாள் ஆளேறும் பல்லாக்கு, திருப்பரங்குன்றம் முருகன் ரத்தின சிம்மாசனம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் குதிரை வாகனம், திருச்சேறை சாரநாதர் வேணுகோபாலர் திருக்கோலம், கடலுார் நல்லாத்துார் வரதராஜர் கோயில் ஆண்டாள் திருக்கல்யாணம்.

ஜன.15 தை 1: பொங்கல், பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 7:30 - 8:30 மணி, உத்ராயண புண்ணிய காலம், சிவாலயங்களில் அயன தீர்த்தம், நெல்லை நெல்லையப்பர் நெல்லுக்கு வேலி கட்டிய லீலை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கல்யானைக்கு கரும்பு கொடுத்த லீலை, ஸ்ரீவி., ஆண்டாள் கதிரறுப்பு விழா, காஞ்சி உலகளந்த பெருமாள் கருட சேவை, கரிநாள்.

ஜன.16 தை 2: மாட்டுப்பொங்கல், கார்த்திகை விரதம், ஸ்ரீவி., ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நந்தீஸ்வரர் , யாளி வாகனம், காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பரிவேட்டைக்கு எழுந்தருளல், திருப்பரங்குன்றம் முருகன் வைரத்தேர், கரிநாள்.

ஜன.17 தை 3: ஏகாதசி விரதம், திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம், குன்றக்குடி சிவன் தங்கத் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் வலைவீசியருளல், கோவை பாலதண்டாயுதபாணி யாளி வாகனம், கரிநாள்.

ஜன.18 தை 4: பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்கு நந்தீஸ்வரர் அபிேஷகம், கண்ணப்பநாயனார் குருபூஜை, கோவை பாலதண்டாயுதபாணி அன்ன வாகனம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சொக்கநாதர் சப்தாவர்ணம், திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us